×

சைக்கோ திரில்லரில் வித்யா

சென்னை தனியார் மருத்துவமனையில் ஸ்டெம்செல் ஆய்வு தேர்வு எழுதி வெற்றி பெற்ற வித்யா பிரதீப், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் சில புதுப்படங்களில் நடிக்கிறார். ‘ஸ்ரீகாந்த் ஜோடியாக எக்கோ என்ற படத்தில் நடிக்கிறேன். இது முழுநீள சஸ்பென்ஸ் திரில்லர். வேறு சில படங்களின் பணிகள் கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பகாலத்தில் சொன்னது போல், இதுவரை எந்தப் படத்திலும் நான் அதிக கவர்ச்சி காட்டி நடித்ததில்லை. தொடர்ந்து அந்த பாலிசியை கடைபிடிப்பேன். நடிப்புக்கு அதிக ஸ்கோப் இருக்கும் கேரக்டரை தேர்வு செய்து நடிக்கிறேன். சினிமா மற்றும் வெப்சீரிஸ் வாய்ப்புகளுக்கு நடுவே விளம்பரங்களில் நடிக்கவும் வாய்ப்பு வருகிறது’ என்ற அவர், லாக்டவுனில் தனது பெற்றோருடன் அதிக நேரம் செலவழித்தாராம்.

Tags :
× RELATED உயிர் தமிழுக்கு திரை விமர்சனம்